
KONGUNADU ARTS AND SCIENCE COLLEGE
(AUTONOMOUS)
Re-accredited by NAAC with A+ Grade - 4th cycle, College of Excellence - UGC
#31 Rank among Colleges in NIRF 2022
Coimbatore - 641 029, Tamil Nadu, India

(AUTONOMOUS)
Re-accredited by NAAC with A+ Grade - 4th cycle, College of Excellence - UGC
#31 Rank among Colleges in NIRF 2022
Coimbatore - 641 029, Tamil Nadu, India
தமிழ்த்துறை சார்பில் உலகத் தொல்குடிகள் நாள் சிறப்புக் கருத்தரங்கம் 18.08.2022 அன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடத்தபெற்றது. விழாவின் தொடக்கமாக சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் ச.அரிச்சந்திரன் அவா்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் கல்லூரிச் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி அவா்கள் தலைமையுரையாற்றி விழாவினைத் துவக்கிவைத்தார். மேலும் கல்லூரி முதல்வா் முனைவா் மா. இலச்சுணசாமி அவா்களும், கல்விப் புல முதன்மையா் முனைவா் எஸ். ஆர். மதன் சங்கர் அவா்களும் இக்கருத்தரங்கம் சிறப்புற நடைபெற வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்புவிருந்தினரான உதகமண்டல தமிழ்நாடு அரசு பழங்குடியினா் ஆய்வு மைய இயக்குநா் முனைவா் த. உதயகுமார் அவா்கள் பழங்குடியினரது வாழ்வியல் முறைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் குறித்துச் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடா்ந்து, உதகமண்டலப் புகைப்படக் கலைஞா் திரு. வே. மதிமாறன் அவா்கள் பழங்குடியினா் குறித்த தனது அனுபவக் கருத்துகளைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியா்களும் மாணவா்களும் பங்கேற்றனா். விழாவின் இறுதியாகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் மு.இராதா அவா்கள் நன்றியுரையாற்றினார்.