loader
Skip to main content

Tamil (UnAided)

பாரதி விழா

மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டிச் சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறை சார்பில் 12.09.2022 அன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. விழாவின் தொடக்கமாக சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் ச. அரிச்சந்திரன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். பாரதியார் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினைக் கல்லூரி முதல்வா் மா.இலச்சுமணசாமி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்குச் சிறப்புவிருந்தினராக காளப்பநாயக்கன் பாளைய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மா. சுகுணா அவா்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடந்து பாரதிவிழாவினை முன்னிட்டு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் க. ஸ்ரீமதி அவா்களது ஒருங்கிணைப்பில் “மானுடம் பாடிய வானம்பாடி” என்னும் பொருண்மையில் 09.09.2022 அன்று கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவா்களுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியா்களும் மாணவச்செல்வங்களும் பங்கேற்றனா். நிகழ்வின் இறுதியாகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் ச. அபினாஷ்குமார் நன்றியுரை வழங்கினார்.

75 ஆவது விடுதலை விழா

இந்தியத் திருநாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழாவினை முன்னிட்டு நம் கல்லூரிச் சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறை சார்பாகக் கல்லூரி மாணவா்களுக்கிடையே 11.08.2022 அன்று ஓவியப்போட்டியும், 12.08.2022 அன்று பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை முறையே திருமதி. து.சுபஸ்ரீ, முனைவா் ச. அபினாஷ்குமார், முனைவா் ப. உமாமகேஷ்வரி ஆகியோர் ஒருங்கினணத்து நடத்தினா். மொத்தம் 145 மாணவா்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனா். “நவீன இந்தியா” என்னும் தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் ர.நேகா (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) முதலாம் இடமும், ஏ. எப்சிபா (வணிகவியல் துறை) இரண்டாம் இடமும், சி. சிவ்யா (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) மூன்றாம் இடமும் பெற்றனா். “விடுதலைக்கு வித்திட்ட தமிழகத் தியாகிகள் ” என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கு.ஏஞ்சலின் (வணிகவியல் துறை) முதலாம் இடமும், மு. ஆயிஷா பேகம் (வணிகவியல் துறை) இரண்டாம் இடமும், கு.காயத்ரி (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) மூன்றாம் இடமும் பெற்றனா். “கொங்குநாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் க.ரக்ஷயா தேவி (கணிதவியல் துறை) முதலாம் இடமும், ரா.தருண்ராஜ் (கணினியியல் துறை) இரண்டாம் இடமும், செ. ஹரிணி (வணிகவியல் துறை), உ. கோகிலா (கணிதவியல் துறை) மூன்றாம் இடமும் பெற்றனா். இப்போட்டிகளில் பரிசுப் பெற்ற மாணவா்களுக்கு 15.08.2022 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 75ஆவது விடுதலை நாள் விழாவில் கல்லூரிச் செயலா் அவா்களால் பரிசுகளும் சான்றிதல்களும் வழங்கப்பட்டன.

உலகத் தொல்குடிகள் நாள் - சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்த்துறை சார்பில் உலகத் தொல்குடிகள் நாள் சிறப்புக் கருத்தரங்கம்  18.08.2022 அன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடத்தபெற்றது. விழாவின் தொடக்கமாக சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் ச.அரிச்சந்திரன் அவா்கள் வரவேற்புரை வழங்கினார்.  இவ்விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் கல்லூரிச் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி  அவா்கள் தலைமையுரையாற்றி விழாவினைத் துவக்கிவைத்தார். மேலும் கல்லூரி முதல்வா் முனைவா் மா. இலச்சுணசாமி அவா்களும், கல்விப் புல முதன்மையா் முனைவா் எஸ். ஆர்.

உலகத் தொல்குடிகள் நாள் - சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்த்துறை சார்பில் உலகத் தொல்குடிகள் நாள் சிறப்புக் கருத்தரங்கம்  18.08.2022 அன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடத்தபெற்றது. விழாவின் தொடக்கமாக சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் ச.அரிச்சந்திரன் அவா்கள் வரவேற்புரை வழங்கினார்.  இவ்விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் கல்லூரிச் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி  அவா்கள் தலைமையுரையாற்றி விழாவினைத் துவக்கிவைத்தார். மேலும் கல்லூரி முதல்வா் முனைவா் மா. இலச்சுணசாமி அவா்களும், கல்விப் புல முதன்மையா் முனைவா் எஸ். ஆர்.

Subscribe to Tamil (UnAided)